/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் பார்வையாளர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு
/
தேர்தல் பார்வையாளர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு
ADDED : ஏப் 09, 2024 05:13 AM

புதுச்சேரி: லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகளை, தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தேர்தல் ஆணையம் மூலம், பல்வேறு இடங்களில், தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட, தேர்தல் செலவின பார்வையாளர்கள் லட்சுமிகாந்தா, முகமது மன்ஸ்ரூல் ஹாசன் ஆகியோர் ,நேற்று, ஆலங்குப்பம், முதலியார்பேட்டை, கடலுார் சாலை அந்தோணியர் கோவில் பகுதிகளில், தேர்தல் துறை பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகளை பற்றி, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

