/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குழப்பம் தீர்ந்தது மாணவர்கள் உற்சாகம்
/
குழப்பம் தீர்ந்தது மாணவர்கள் உற்சாகம்
ADDED : ஏப் 01, 2024 04:55 AM

புதுச்சேரி தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், எதிர்கால உயர்படிப்பு குறித்த குழப்பத்திற்கு தீர்வு கிடைத்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
புதிய படிப்பான டேட்டா சயின்ஸ் தேர்ந்தெடுத்து படிக்க விருப்பம். ஆனால், அந்த படிப்பு குறித்து ஏகப்பட்ட சந்தேகங்கள் இருந்தன. அனைத்திற்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் விடை கிடைத்தது. வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்தது பயனுள்ளதாக இருந்தது. தெளிவு கிடைத்தது.
கண்காட்சியில், பொது அறிவு போட்டியில் முதலிடம் பிடித்து டேப்லெட் வென்றது இரட்டிப்பு மகிழ்ச்சி. தினமலர் நாளிதழுக்கு நன்றி
முத்துலட்சுமி, புதுச்சேரி
அடுத்து என்ன படிப்பது, எந்த கல்லுாரியில் படிப்பது என, கண்ணை காட்டி காட்டில் விட்டது போன்று குழப்பம் இருந்தது. தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், உயர் கல்வியில் இத்தனை படிப்புகள் உள்ளதா என்பதை அறித்து, பிரமித்துப் போனேன். விரும்பிய பாடப்பிரிவை தேர்வு செய்து படிப்பதற்கு, தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் ஆலோசனைகளை வழங்கி, வழிகாட்டி உள்ளனர்.
வித்யாலட்சுமி, புதுச்சேரி:
இன்ஜினியரிங் படிக்க உள்ளேன். ஆனால் வெறும் இன்ஜினியரிங் படிப்பு மட்டும் வாழ்க்கைக்கு உதவாது. அந்த படிப்பில் பல்வேறு துறைசார்ந்த படிப்புகளில் திறமைகள் இருந்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என, நெற்றிப்பொட்டில் அடித்ததை போன்று கல்வியாளர்கள் கூறினர். குறிப்பாக, உலகை ஆளப்போகும் சைபர் செக்யூரிட்டி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவுகள், விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மெண்டட் ரியாலிட்டி, இண்டர்நெட் ஆப் திங்க்ஸ், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், 3டி அச்சு தொழில்நுட்பம் குறித்து தெளிவாக விளக்கினர். பயனுள்ளதாக இருந்தது.
கோகுலபிரியா, பண்ருட்டி:
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், உயர்கல்விக்கு வழிகாட்டுவது மட்டுமின்றி, மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில், கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கினர். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிகழ்ச்சி, மாணவர் உலகம் சரியான திசையில் செல்ல கலங்கரை விளக்கமாக வழிகாட்டுகிறது. இங்கு கூறப்பட்ட கருத்துக்களை, மாணவர்கள் தவறாமல் கடைபிடித்தால் நிச்சயம பயனுள்ளதாக அமையும்.
பிரதீப்பிரகாஷ், கள்ளக்குறிச்சி:
வழிகாட்டி நிகழ்ச்சியில் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் என, அனைத்து துறை சார்ந்த படிப்புகள் குறித்து ஒரே இடத்தில் அறிந்துகொள்ள முடிந்தது. பல்வேறு படிப்புகள் குறித்து கல்வி நிறுவனங்களிடமிருந்து தகவல்களை பெற முடிந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், வணிகவியல் படிப்பிற்கான உயர் கல்வி குறித்து தெளிவான முடிவுக்கு என்னால் வர முடிந்தது.
சர்வேஷ், புதுச்சேரி:
வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், எந்த மாதிரியான பாடப்பிரிவு படித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன். அதற்கான அடித்தள பயணத்தை பிளஸ் 2 வகுப்பில் இருந்தே எடுக்க உள்ளேன். கல்வியாளர்களிடமிருந்து அற்புதமான தகவல்கள் கிடைத்தது. இவை அனைத்தையும் பள்ளியில் உடன் பயிலும் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்வேன்.
சேகர், பண்ருட்டி.

