/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரி பாக்கியை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை: ஆணையர்
/
வரி பாக்கியை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை: ஆணையர்
வரி பாக்கியை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை: ஆணையர்
வரி பாக்கியை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை: ஆணையர்
ADDED : மே 23, 2024 12:43 AM
பாகூர் : அனுமதியின்றி எடுத்துள்ள குடிநீர் இணைப்புகளுக்கான கட்டணத்தையும், நிலுவையில் உள்ள வரி பாக்கி தொகையை, வரும் ஜூன் 30ம் தேதிக்குள் செலுத்திட வேண்டும் என பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து எச்சரித்துள்ளது.
இது குறித்து ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; பாகூர் கொம்பூன் பஞ்சாயத்திற்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் நிறுவனங்கள் வளாகங்கள் வரி, தொழில் உரிமை கட்டண வரி ஆகியவற்றை பலமுறை அறிவுறுத்தியும் பெரும்பாலானவர்கள் இன்னும் செலுத்தவில்லை. மேலும், பலர் முறையான அனுமதியின்றி எடுத்துள்ள குடிநீர் இணைப்புகளால், குடிநீர் குழாய் பழுதாகி, கழிவு நீர் கலந்து சுகாதார சீர்கேடு உண்டாகிறது.
எனவே, வரும் ஜூன் 30ம் தேதிக்குள் தாங்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கிகளையும், முறையற்ற குடிநீர் இணைப்புகளை கட்டணம் செலுத்தி முறைப்படுத்திட வேண்டும். தவறினால் அனுமதி இன்றி எடுக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் கண்டறிந்து உடனடியாக துண்டிக்கப்படும்.
மேலும், நடைமுறையில் உள்ள 1973 கொம்பூன் பஞ்சாயத்து சட்டத்தின்படி குடிநீர் ,மின் இணைப்புகள் துண்டிப்பு, மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

