/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூனிச்சம்பட்டில் சிறப்பு துப்புரவு பணி விழிப்புணர்வு ஊர்வலம்
/
கூனிச்சம்பட்டில் சிறப்பு துப்புரவு பணி விழிப்புணர்வு ஊர்வலம்
கூனிச்சம்பட்டில் சிறப்பு துப்புரவு பணி விழிப்புணர்வு ஊர்வலம்
கூனிச்சம்பட்டில் சிறப்பு துப்புரவு பணி விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : மே 23, 2024 05:39 AM

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சிறப்பு துப்புரவு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் கூனிச்சம்பட்டில் நடந்தது.
புதுச்சேரி, உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல் உத்தரவின் பேரில் அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றும் சிறப்பு துப்புரவு பணி நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் கூனிச்சம்பட்டு கிராமத்தில் ஹெச்.ஆர். ஸ்கொயர் தனியார் நிறுவன ஊழியர்கள் மூலம் சிறப்பு துப்புரவு பணி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.இதனை கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் துவக்கி வைத்து, பொதுமக்கள் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஹெச். ஆர்.ஸ்கொயர் நிறுவனத்தினர் வீடுகளுக்குவரும் போது, குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும்.
மேலும், குப்பைகளை சாலையில் வீசுவதை தவிர்த்து, அருகில் உள்ள குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், இளநிலை பொறியாளர் ஆனந்தன், ஹெச்.ஆர்.ஸ்கொயர் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், சாலையோர குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.

