தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆய்வுத்திட்ட அறிக்கைக்கு நிதியுதவி பெறுதல் குறித்த கருத்தரங்கம்

ஆய்வுத்திட்ட அறிக்கைக்கு நிதியுதவி பெறுதல் குறித்த கருத்தரங்கம்

ஆய்வுத்திட்ட அறிக்கைக்கு நிதியுதவி பெறுதல் குறித்த கருத்தரங்கம்


ADDED : ஜூலை 16, 2024 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2024 05:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் ஆய்வுத்திட்ட அறிக்கைக்கு நிதி உதவி பெறுதல் குறித்த கருத்தரங்கம் நடந்தது.

மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி கல்வி குழும தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், கல்லுாரி இயக்குனர் மற் றும் முதல்வர் வெங்கடாஜலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்லுாரியின் அகடமிக் டீன் அறிவழகர் வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் லைப் சயின்ஸ் துறையின் டீன் முனைவர் பிரதாப் குமார் ஷெட்டி பங்கேற்று, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் ஆய்வுத் திட்ட முன்மொழிவு அறிக்கைகளுக்கு நிதியுதவி பெறுவது குறித்தும், ஆய்வு திட்ட முன்மொழிவு தயார் செய்யும் போது, கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்களை விரிவாக விளக்கினார்.

சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் இருக்கிற நிதி உதவி செய்யும் அமைப்புகளை பற்றிய விவரங்களை பட்டியலிட்டு விளக்கினார்.

தொடர்ந்து, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் கலந்து கொண்டு சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை டீன் வேல்முருகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை இயந்திரவியல் துறை பேராசிரியர் தியாகராஜன் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us