/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தா பள்ளி மாணவர்களுக்கு செல்வகணபதி எம்.பி., பாராட்டு
/
விவேகானந்தா பள்ளி மாணவர்களுக்கு செல்வகணபதி எம்.பி., பாராட்டு
விவேகானந்தா பள்ளி மாணவர்களுக்கு செல்வகணபதி எம்.பி., பாராட்டு
விவேகானந்தா பள்ளி மாணவர்களுக்கு செல்வகணபதி எம்.பி., பாராட்டு
ADDED : மே 18, 2024 06:29 AM

புதுச்சேரி : விவேகானந்தா சி.பி.எஸ்.இ., பள்ளியில், 10வது மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை செல்வகணபதி எம்.பி., பாராட்டினார்.
அய்யங்குட்டிபாளையம், கோபாலன் கடையில் உள்ள விவேகானந்தா சி.பி.எஸ்.இ., பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வில் பங்கேற்ற 83 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். மாணவி வைஷ்ணவி 488 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மாணவர் தணிகைவேல் 487, மாணவி சுவேதா 486 மதிப்பெண் பெற்று முறையே இரண்டு மற்றும் மூன்றாமிடம் பிடித்தனர்.
450க்கு மேல், 21 பேர், 375க்கு மேல் 51 பேர் மதிப்பெண் பெற்றனர். மொழிப்பாடத்தில் 3 பேர், கணிதத்தில் 2 பேர், தகவல் தொழில் நுட்பத்தில் ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
அதே போல், பிளஸ் 2 தேர்வு எழுதிய 60 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவி நிவேதிதா 474 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மாணவி பிரீத்தி, 469, மாணவர் ஜெய்கிருஷ்ணன் 465 மதிப்பெண்பெற்று முறையே இரண்டு மற்றும் மூன்றாமிடம் பிடித்தனர்.
450க்கு மேல் 6 பேர், 375க்கு மேல் 24 பேர் மதிப்பெண்கள் பெற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியரை, விவேகானந்தா கல்வி குழும தாளாளர் செல்வகணபதி எம்.பி, முதன்மை முதல்வர் பத்மா, பள்ளி முதல்வர் மேனகா ஆகியோர் பாராட்டினர்.

