/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரண, சாரணிய பயிற்சி முகாம் ஆசிரியர்கள் பதிவு செய்ய அழைப்பு
/
சாரண, சாரணிய பயிற்சி முகாம் ஆசிரியர்கள் பதிவு செய்ய அழைப்பு
சாரண, சாரணிய பயிற்சி முகாம் ஆசிரியர்கள் பதிவு செய்ய அழைப்பு
சாரண, சாரணிய பயிற்சி முகாம் ஆசிரியர்கள் பதிவு செய்ய அழைப்பு
ADDED : மார் 31, 2024 04:42 AM
புதுச்சேரி : பள்ளி கல்வித் துறையின் பாரத சாரண சாரணிய பயிற்சி முகாமிற்கு பள்ளி ஆசிரியர்கள் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
பாரத சாரண சாரணிய புதுச்சேரி மாநில அமைப்பு ஆணையர் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு பள்ளி கல்வித் துறை பாரத சாரண சாரணிய இயக்கத்தின் மூலம் ஏப்., 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை பள்ளி ஆசியர்களுக்கு ஏழு நாள் உறைவிட பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் பயன்பெறும் வகையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி, துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி பெற்று அவரவர்கள் பள்ளிகளில் சாரண இயக்கத்தை துவங்கி மாணவர்களுக்கு பயற்சி அளிக்கலாம். இதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதி விருது பெறுவதற்கு தகுதி பெறுவர்.
துவக்கப் பள்ளி இருபால் ஆசிரியர்களுக்கு குருளையர் சாரண பயிற்சி, துவக்கப் பள்ளி பெண் ஆசிரியர்களுக்கு மட்டும் நீலப்பறவை சாரணப் பயிற்சி, நடுநிலை மற்றும் உயர்நிலை இருபால் ஆசிரியர்களுக்கு சாரண ஆசிரியர் பயிற்சி, நடுநிலை மற்றும் உயர்நிலை பெண் ஆசிரியர்களுக்கு மட்டும் சாரணிய ஆசிரியர் பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சி முகாம் குறித்த சுற்றறிக்கை பள்ளி கல்வி துறையின் https://schooledn.py.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முகாமில் பயிற்சி பெற விருப்பம் உள்ள ஆசிரியர்கள், பள்ளி தலைமையாசிரியர் ஒப்புதலுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 95438-83318 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

