/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துப்புரவு தொழிலாளர்கள் மறியல் திருபுவனையில் திடீர் பரபரப்பு
/
துப்புரவு தொழிலாளர்கள் மறியல் திருபுவனையில் திடீர் பரபரப்பு
துப்புரவு தொழிலாளர்கள் மறியல் திருபுவனையில் திடீர் பரபரப்பு
துப்புரவு தொழிலாளர்கள் மறியல் திருபுவனையில் திடீர் பரபரப்பு
ADDED : மார் 05, 2025 04:45 AM

திருபுவுனை: திருபுவனையில் தனியார் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் நான்கு வழிச்ச்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் கீழ் வேலை செய்து வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. தொழிலாளர்கள் அந்த நிறுவன அதிகாரிகளிடம் நிலுவை சம்பளம் கேட்டும் சம்பளம் வழங்காததால் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.இருந்தும் சம்பளம் வழங்கவில்லை.
திருபுவனை பகுதியில் வேலை செய்து வரும் துப்புரவு தொழிலாளர்கள் நேற்று காலை திருபுவனை இந்திரா நகர் மற்றும் சிலோன் குடியிருப்புக்கு எதிரே நான்கு வழிச்சாலையில் குப்பைகளை அகற்ற பயன்படுததும் மூன்று சக்கர வண்டிகளை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருபுவனை போலீசார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா, இது குறித்து முதல்வரிடம் எடுத்துக்கூறி நிலுவை சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து துபு்பரவு தொழிலாளர்களுக்கு 4 மாத சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

