/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து ராமநாதபுரத்தில் சாலை மறியல்
/
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து ராமநாதபுரத்தில் சாலை மறியல்
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து ராமநாதபுரத்தில் சாலை மறியல்
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து ராமநாதபுரத்தில் சாலை மறியல்
ADDED : ஏப் 02, 2024 04:12 AM

வில்லியனுார், : வில்லியனுார் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
வில்லியனுார் அடுத்த ராமநாதபுரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் கிராமத்தை சுற்றிலும் புதிய மனை பிரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லமுடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் பத்துக்கண்ணு-சோரப்பட்டு மெயின் ரோட்டில் காலை 10:00 மணியளவில் சாலை மறியல் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவலறிந்த வில்லியனுார் போலீசார் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலைப் பொறியாளர் கருத்தையன் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் விலகிசென்றனர். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்தை தடைபட்டது.

