/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நல்லவாடு பள்ளியில் வள மையம் துவக்க விழா
/
நல்லவாடு பள்ளியில் வள மையம் துவக்க விழா
ADDED : செப் 17, 2024 04:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : நல்லவாடு அரசு நடுநிலைப்பள்ளியில் ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான வள மைய தொடக்க விழா நடந்தது.
பள்ளியில் நடந்த விழாவை முதன்மை கல்வி அலுவலர் மோகன் துவக்கி வைத்தார். பாலசேவிகா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.அஜிம் பிரேம்ஜி பவுண்டேஷன் கருத்தாளர் காந்திமதி, மைய முக்கியத்துவம் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

