/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபரை ஊருக்குள் நுழைய தடை விதிக்க கோரி பரிந்துரை
/
வாலிபரை ஊருக்குள் நுழைய தடை விதிக்க கோரி பரிந்துரை
வாலிபரை ஊருக்குள் நுழைய தடை விதிக்க கோரி பரிந்துரை
வாலிபரை ஊருக்குள் நுழைய தடை விதிக்க கோரி பரிந்துரை
ADDED : மார் 24, 2024 04:25 AM
பாகூர்: லோக்சபா தேர்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாலிபர் ஒருவரை ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என, கிருமாம்பாக்கம் போலீசார், கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தேர்தல் சமயத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, கிருமாம்பாக்கம் புது தெருவை சேர்ந்த சேர்ந்த ரூபன் (எ) பரணிரூபன் 34; ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனுக்கு பரிந்துரை செய்துள்ளார்.