தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள் விழா

ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள் விழா

ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள் விழா


ADDED : செப் 17, 2024 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2024 06:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார், : கடலுாரில், சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சிகள் மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர்,முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள் விழாவையொட்டி கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கலெக்டர் சிபி அதித்யா செந்தில்குமார், எஸ்.பி.,ராஜாராம், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன்,மாநகர கமிஷனர் அனு, ஆர்.டி.ஓ., அபிநயா,முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க.,: சார்பில், முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமை தாங்கி, ராமசாமி படையாட்சியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சொரத்துார் ராஜேந்திரன், முருகுமாறன், செல்வி ராமஜெயம், மாநில ஜெ., பேரவை இணை செயலாளர்கள் ஆறுமுகம், பக்தரட்சகன், மாவட்ட அவைத் தலைவர் குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பா.ம.க., : மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில், மாவட்டத் தலைவர் தட்சிணாமூர்த்தி, வக்கீல் தமிழரசன், விஜயவர்மன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us