/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் புதுச்சேரி தாசில்தார் அறிவிப்பு
/
விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் புதுச்சேரி தாசில்தார் அறிவிப்பு
விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் புதுச்சேரி தாசில்தார் அறிவிப்பு
விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் புதுச்சேரி தாசில்தார் அறிவிப்பு
ADDED : மே 20, 2024 04:08 AM
புதுச்சேரி, : புதுச்சேரி தாசில்தார் அலுவலகத்தில் சாதி, குடியிருப்பு உள்ளிட்ட சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி தாசில்தார் பிரிதிவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
உயர் கல்வி பயில விரும்பும் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தேவையான சாதி, குடியிருப்பு சான்றிதழ்கள் வழங்க கடந்த 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை புதுச்சேரி தாலுகா அலுவலகத்திற்குட்பட்ட பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த சிறப்பு முகாம்களில் கள விசாரணைக்காக ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் விண்ணப்பதாரர்கள் பிர்கா அலுவலகங்களில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் புதிதாக விண்ணப்பிக்க உள்ளவர்கள், அவர்களின் குடியிருப்பு பகுதிக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவரின் கள விசாரணை அறிக்கை பெற்று பிர்கா அலுவலகமான ஆர்.ஐ., அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
சான்றிதழ்களை வழங்குவதற்காக கூடுதலாக துணை தாசில்தார்கள், புதுச்சேரி, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம் பிர்கா அலுவகங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். புதுச்சேரி வ.உ.சி.,தெருவில் உள்ள புதுச்சேரி பிர்கா அலுவலகத்தில், புதுச்சேரி, முத்தியால்பேட்டை வார்டு-ஏ,வார்டு-பி, ராஜ்பவன், காசுக்கடை, காத்தெட்ரல், உப்பளம் வருவாய் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
புதுச்சேரி ஆர்.டி.ஓ., அலுலகம் அருகில் உள்ள முதலியார்பேட்டை பிர்கா அலுவலகத்தில், முருங்கப்பாக்கம், கொம்பாக்கம், தேங்காய்திட்டு, உழந்தை, புதுப்பாளையம் வருவாய் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகில் உள்ள பிர்கா அலுவலகத்தில், அரியாங்குப்பம், மணவெளி, தவளக்குப்பம், பூரணாங்குப்பம், அபி ேஷகப்பாக்கம், டி.என்., பாளையம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் தங்களுடைய சாதி, குடியிருப்பு உள்ளிட்ட சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

