/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறை தனியார் மயம் விவகாரம் முதல்வரை மிரட்டி கையெழுத்து
/
மின்துறை தனியார் மயம் விவகாரம் முதல்வரை மிரட்டி கையெழுத்து
மின்துறை தனியார் மயம் விவகாரம் முதல்வரை மிரட்டி கையெழுத்து
மின்துறை தனியார் மயம் விவகாரம் முதல்வரை மிரட்டி கையெழுத்து
ADDED : ஏப் 05, 2024 05:21 AM
மாஜி முதல்வர் நாராயணசாமி 'திடுக்'
புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் கோப்பிற்கு முதல்வர் ரங்கசாமியை மிரட்டி பா.ஜ., கையெழுத்து வாங்கியது என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது;
டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது அரசியல் பழிவாங்கும் செயல். நன்கொடை பத்திரம் மூலம் பா.ஜ., ஊழல் வெளியே வந்துள்ளது.
கடந்த காங்., ஆட்சியில் புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்க மத்திய மின்துறையில் இருந்து கடிதம் வந்தபோது, அதை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்கு நமச்சிவாயம் அதற்கு ஆதரவு தெரிவித்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவுக்கு நமச்சிவாயம் ஒப்புதல் தெரிவித்துள்ளார். அந்த கோப்பிற்கு முதல்வர் ரங்கசாமி கையெழுத்து போடாமல் 4 மாதம் வைத்திருந்தார். பா.ஜ., முதல்வர் ரங்கசாமியை மிரட்டி கையெழுத்து வாங்கி உள்ளனர்.
நமச்சிவாயம் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு பொதுதேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்து விட்டது. சி.பி.எஸ்.இ., பாட திட்டம் கொண்டு வந்து பள்ளியின் தரத்தை குறைத்து விட்டனர். திறமை இல்லாத நிர்வாகத்தால் கல்வித்துறை சீரழிந்து விட்டது.
கடந்த 3 ஆண்டுகளில் ஒரு தொழிற்சாலை கூட புதுச்சேரிக்கு வரவில்லை. காவல் துறை நிர்வாக சீர்கேட்டின் உச்சத்தில் உள்ளது. கொலை, கொள்ளை, கடத்தல், வீடு அபகரிப்பு, வெடிகுண்டு வீச்சு, கஞ்சா விற்பனை நடக்கிறது.
ஒரு பா.ஜ., எம்.எல்.ஏ., தேர்தலில் பா.ஜ.வுக்கு ஓட்டு அளிக்கவில்லை என்றால், தான் அளிக்கும் இலவசத்தை நிறுத்தி விடுவேன் என மிரட்டுகிறார். இது தொடர்பாக தேர்தல் துறையில் புகார் அளிக்கப்படும் என கூறினார்.

