/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இடி மின்னலுடன் திடீர் மழை 4 மணி நேரம் பவர் 'கட்'
/
இடி மின்னலுடன் திடீர் மழை 4 மணி நேரம் பவர் 'கட்'
ADDED : மே 16, 2024 10:52 PM
நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுாரில் நேற்று மதியம் இடி மின்னலுடன் கனமழை பெய்ததாதல் பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.
புதுச்சேரியில், கடந்த சில மாதங்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது.
இந்நிலையில் நேற்று காலை முதல் லேசனா மழை பெய்து கொண்டிருந்தது. மதியம் 12:30 மணியளவில் நெட்டபாக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
குறிப்பாக பண்டசோழநல்லுார் கிராமத்தில் நேற்று மதியம் 12:30 மணி முதல் 3:00 மணி வரை கனமழை பெய்தது. இதனால் இப்பகுதியில் 12:30 மணி முதல் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திடீர் கன மழையால் வெயிலின் தாக்கத்தில் இருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

