/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொன்முடி மீதான குவாரி வழக்கு 'பல்டி' சாட்சி 22 ஆக உயர்வு
/
பொன்முடி மீதான குவாரி வழக்கு 'பல்டி' சாட்சி 22 ஆக உயர்வு
பொன்முடி மீதான குவாரி வழக்கு 'பல்டி' சாட்சி 22 ஆக உயர்வு
பொன்முடி மீதான குவாரி வழக்கு 'பல்டி' சாட்சி 22 ஆக உயர்வு
UPDATED : ஏப் 24, 2024 07:22 AM
ADDED : ஏப் 24, 2024 07:11 AM

விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையில் நேற்று, மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்தார்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் அனுமதியை மீறி செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் இவ்வழக்கில் மொத்தமுள்ள 67 அரசு தரப்பு சாட்சிகளில் நேற்று முன்தினம்வரை 25 பேர் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 21 பேர் பிறழ் சாட்சி அளித்தனர்.
நேற்று நடந்த விசாரணையில், 26வது சாட்சியான அப்போதைய வி.அகரம் வி.ஏ.ஓ.,வும் தற்போதைய விழுப்புரம் - கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உதவி இயக்குனரான மோகன், உயர் அதிகாரிகள் வற்புறுத்தியதன் பேரில், கோப்புகளில் கையெழுத்திட்டேன். எனக்கும் இவ்வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை' என பிறழ் சாட்சியம் அளித்தார்.
அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி பூர்ணிமா, விசாரணையை நாளை (இன்று) ஒத்திவைத்தார்.

