/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பைக்'கில் வந்து ஓட்டுப்போட்ட முதல்வர் குடும்பத்துடன் ஓட்டுப் போட்ட அரசியல் பிரமுகர்கள்
/
'பைக்'கில் வந்து ஓட்டுப்போட்ட முதல்வர் குடும்பத்துடன் ஓட்டுப் போட்ட அரசியல் பிரமுகர்கள்
'பைக்'கில் வந்து ஓட்டுப்போட்ட முதல்வர் குடும்பத்துடன் ஓட்டுப் போட்ட அரசியல் பிரமுகர்கள்
'பைக்'கில் வந்து ஓட்டுப்போட்ட முதல்வர் குடும்பத்துடன் ஓட்டுப் போட்ட அரசியல் பிரமுகர்கள்
ADDED : ஏப் 20, 2024 05:41 AM

புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தேர்தலில், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஓட்டளித்தனர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், காலையில் இருந்தே ஓட்டு சாவடி மையங்களில் குவிந்து, ஓட்டுப் போட்டனர்.
முதல்வர்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஒவ்வொரு தேர்தலிலும், தனது 'யமஹா' பைக்கில் வந்து ஓட்டுப்போடுவது வழக்கம். அவர் அதை 'சென்டிமென்ட்' ஆகவும் வைத்துள்ளார்.
நேற்று காலை அவர் வீட்டில் இருந்து 'யமஹா' பைக்கில், திலாசுபேட்டை அரசுப்பள்ளி ஓட்டுச்சாவடிக்கு வந்தார்.
நல்ல நேரம் பார்த்து, காலை 8:30 மணிக்கு, தனது ஓட்டை பதிவு செய்தார். அங்கிருந்து, அப்பா பைத்தியம் சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாட்டார்.
சபாநாயகர்
சபாநாயகர் செல்வம் தவளக்குப்பம், நல்லவாடு சாலை, ஆச்சார்யா பள்ளி ஓட்டுச்சாவடி மையத்திற்கு தனது குடும்பத்துடன் சென்று ஓட்டளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்
எதிர்க்கட்சித்தலைவர் சிவா காமராஜர் சாலையில் உள்ள, கூட்டுறவு கட்டட மைய, ஓட்டுச்சாவடியில், தனது மனைவி, மகன், மகள் உள்ளிட்டோருடன் சென்று ஓட்டளித்தார்.
மாஜி முதல்வர்
புதுச்சேரி மிஷன் வீதி, வ.உ.சி பள்ளியில் அமைக்கப்பட்ட பசுமை ஓட்டுச்சாவடியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஓட்டளித்தார். அந்த மையத்திற்கு வந்த போது, வாக்காளர் வரிசை மிக நீண்டதாக இருந்தது. அதனால் வரிசையில் நீண்ட நேரம் பொறுமையாக நின்று, அதற்கு பிறகு ஓட்டளித்தார்.
எம்.பி., - எம்.எல்.ஏ.,கள்
லாஸ்பேட்டை, கோலக்கார அரங்கசாமி அரசுப்பள்ளியில் செல்வ கணபதி எம்.பி., ஓட்டளித்தார். அரசு கொறடா ஆறுமுகம் முத்தரையார் பாளையம் ஆயி அம்மாள் அரசு பள்ளியில், தனது மனைவியுடன் சென்று ஓட்டளித்தார்.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில், பாஸ்கர் எம்.எல்.ஏ., ஓட்டளித்தார். அதேபோல, பெருமாள் கோவில் வீதி மின்துறை அலுவலக ஓட்டுச்சாவடி மையத்தில், வெங்கடேசன் எம்.எல்ஏ., ஓட்டளித்தார்.
அரசியல் பிரமுகர்கள்
அதி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், பாதர் சாஹீப் வீதியில் உள்ள அரசுப்பள்ளியிலும், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் நெல்லித்தோப்பு தொகுதி நவீனா கார்டன் ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தனர்.
இ.கம்யூ.இ மாநில செயலாளர் சலீம், சாரம், பதிவாளர் அலுவலகத்திலும், பா.ம.க., மாநில அமைப்பாளர் கணபதி, இடையார் பாளையத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியிலும் ஓட்டளித்தனர்.
ராகுகாலம்
நேற்று வெள்ளிக்கிழமை ராகு காலம் 10:30 மணி முதல் 12:00 மணி என்பதால், பெரும்பாலான அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் காலையில், 10:30 மணிக்கு முன்பே தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். அப்போது ஓட்டளிக்காதவர்கள் மதியம் 12:00 மணிக்கு பிறகு, ஓட்டுப் போட்டனர்.

