தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீஸ் உருவ பொம்மை எரிப்பு: மத்திய பல்கலையில் பரபரப்பு

போலீஸ் உருவ பொம்மை எரிப்பு: மத்திய பல்கலையில் பரபரப்பு

போலீஸ் உருவ பொம்மை எரிப்பு: மத்திய பல்கலையில் பரபரப்பு


ADDED : ஆக 14, 2024 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2024 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : போராட்டம் நடத்திய மாணவர்களை தாக்கிய போலீசாரின் உருவ பொம்மையை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் சில தினங்களாக தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து மாணவிகள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாணவிகளுக்கு ஆதரவாளர் மாணவர்கள் பல்கலை நிர்வாகத்தை கண்டித்து விடுதி காப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களை, எஸ்.பி., முருகையன் தலைமையில் போலீசார் மற்றும் பல்கலை செக்யூரிட்டிகள் அப்புறப்படுத்தினர். அப்போது, மாணவர்கள் சிலருக்கு கை மற்றும் கழுத்து பகுதியில் அடிப்பட்டது.

ஆத்திரமடைந்த மாணவர்கள், போலீசாரை கண்டித்து, போலீசாரின் உருவ பொம்மையை எரித்தனர்.

மேலும், தாக்குதல் நடத்திய போலீசார், செக்யூரிட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பல்கலை பதிவாளரிடம் மனு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us