தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருடி வரப்பட்ட மினி டெம்போ விரட்டி பிடித்த போலீசார்

திருடி வரப்பட்ட மினி டெம்போ விரட்டி பிடித்த போலீசார்

திருடி வரப்பட்ட மினி டெம்போ விரட்டி பிடித்த போலீசார்


ADDED : மார் 13, 2025 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2025 12:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை: மதுரையில் திருடி வரப்பட்ட மினி டெம்போவை, உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

மதுரை மாவட்டம், மேலுார் அடுத்த மருதுாரை சேர்ந்தவர் ராஜீவ். இவர், நேற்று முன்தினம் வீட்டு அருகே தனது மினி டெம்போவை நிறுத்தி வைத்திருந்தார். சிறிது நேரத்தில் மினி டெம்போ காணாததால் அதிர்ச்சியடைந்த ராஜீவ், மேலுார் போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து திருச்சி, கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சப் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் நேற்று காலை 7:00 மணியளவில், திருச்சி சாலையில் ரவுண்டானா அருகே வந்த மினி டெம்போவை நிறுத்தினர்.

ஆனால், டெம்போவை நிறுத்தாமல் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் வழியாக தப்பிச் செல்ல முயன்றனர். போலீசாரும் விடாமல் டெம்போவை விரட்டி சென்று பிடித்தனர்.

அப்போது, டெம்போவில் இருந்த ஒருவர் தப்பியோடிய நிலையில், ஒருவர் மட்டும் சிக்கினார். விசாரணையில், பெரம்பலுார் அடுத்த பில்லாங்குளம் பகுதியை சேர்ந்த மாதேஷ் மகன் வெங்கடேசன், 27; என்பதும், தப்பியோடிய நபர் ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜாராம், 32; என்பதும் தெரியவந்தது.

அதையடுத்து, பிடிபட்ட வெங்கடேசனை மதுரை போலீசாரிடம், உளுந்துார்பேட்டை போலீசார் ஒப்படைத்தனர்.

மதுரையில் திருடி கடத்திவரப்பட்ட மினி டெம்போவை சினிமா பாணியில் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us