ADDED : ஏப் 29, 2024 04:04 AM

திருக்கனுார், : காட்டேரிக்குப்பம் போலீஸ்சார்பில் கஞ்சா போதை பொருட்கள் தொடர்பான இளைஞர்கள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
லிங்காரெட்டிப்பாளையத்தில் நடந்த கூட்டத்திற்கு, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமை தாங்கினார்.சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் இளைஞர்கள் எவ்வாறு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
இப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது, இளைஞர்கள் யாரேனும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரிய வந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான போக்சோ சட்டம் குறித்தும், அதற்கான தண்டனை விபரங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
இதில், லிங்காரெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள்கலந்து கொண்டனர்.

