/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளஸ் 1 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது
/
பிளஸ் 1 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது
ADDED : மே 14, 2024 05:21 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், பிளஸ்1 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை இன்று காலை வெளியிடுகிறது.
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம், 4ம் தேதி முதல், 25ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வு நடந்தது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் இருந்து, 1 முதல் 9ம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்புக்கும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அரசு பள்ளிகளில், படித்த மாணவர்கள் தமிழக பாடத்தின் கீழ், பிளஸ் 1, பொதுத்தேர்வு எழுதவில்லை. அதேசமயம், புதுச்சேரி அரசு நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில், பிளஸ் 1, படித்த மாணவர்கள் மட்டும் பொதுத்தேர்வு எழுதினர்.
புதுச்சேரி 6962, காரைக்கால் 701, தனித்தேர்வர்கள் 111, ஏற்கனவே தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் - 201 பேர் என மொத்தம், 7,963 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த, ஏப். 6ம் தேதி முதல் ஏப். 25ம் தேதி வரை நடந்தது.
இணைய தளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட, இதர பணிகளும் முடிக்கப்பட்டன. இந்நிலையில், புதுச்சேரி, காரைக்காலில், பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிடுகிறது.

