/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒவ்வொரு கிராமங்களிலும் நிரந்தர விளையாட்டு மைதானங்கள் தேவை
/
ஒவ்வொரு கிராமங்களிலும் நிரந்தர விளையாட்டு மைதானங்கள் தேவை
ஒவ்வொரு கிராமங்களிலும் நிரந்தர விளையாட்டு மைதானங்கள் தேவை
ஒவ்வொரு கிராமங்களிலும் நிரந்தர விளையாட்டு மைதானங்கள் தேவை
ADDED : ஆக 29, 2024 07:12 AM
புதுச்சேரி: ஒவ்வொரு கிராமங்களிலும் புதிய விளையாட்டு இடங்களை கண்டறிந்து, இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் விளையாட்டு மிகவும் இன்றியமையாதது. அது அவர்களை ஆரோக்கியமாகவும் நன்றாகவும் உடல் வலிமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
சிறிய வயது என்றில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் விளையாட்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் புதுச்சேரியில் விளையாட்டுகளை மேம்படுத்த பெரிய முயற்சிகள் ஏதும் எடுக்கப்படவில்லை. புதிய விளையாட்டு திடல்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. விளையாட்டுக்கென ஒவ்வொரு கிராமங்களிலும் முறையாக உட்கட்டமைப்புகள் இல்லை.
பள்ளி மைதானம், கோவில்கள் இடங்கள், காலிமனைகள், என கிடைக்கும் இடங்களில் இளைஞர்கள் விளையாடி வருகின்றனர்.
இதேபோல் பள்ளி மைதானங்களிலும் அவ்வூர் இளைஞர்களை விளையாட அனுமதி தருவதில்லை. கோவில் இடங்கள் வேறு ஒரு பயன்பாட்டிற்கு மாற்றும்போது, அதுவரை விளையாட்டு திடலாக இருந்த இடம், காணாமல் போய்விடுகிறது.
காலம் காலமாக ஒவ்வொரு கிராமத்திலும் இது தான் நடந்து வருகிறது. விளையாடும் தலைமுறையினரும் மாறினாலும், நிரந்தர விளையாட்டு திடல்கள் மட்டும் இருப்பதில்லை. இப்போது ஒவ்வொரு ஊரிலும், கஞ்சா நுழைந்துவிட்டது. அவர்களை விளையாட்டுகளால் மட்டுமே மீட்டெடுத்து தவறான பாதையில் செல்லுவதை தடுக்க முடியும்.
ஒவ்வொரு ஊரிலும் புதிய விளையாட்டு இடங்களை அரசு கண்டறிந்து, அந்த ஊர் இளைஞர்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும். இதற்காக ஒரு குழு அமைத்து, விளையாட்டு திடல்களை இறுதி செய்ய வேண்டும். விளையாட்டு திடலில் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தால், திறமையான விளையாட்டு வீரர்கள் புதுச்சேரிக்கு கிடைப்பர்.

