/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எனக்கு கட்சி தான் முக்கியம் பா.ம.க., அன்புமணி திட்டவட்டம்
/
எனக்கு கட்சி தான் முக்கியம் பா.ம.க., அன்புமணி திட்டவட்டம்
எனக்கு கட்சி தான் முக்கியம் பா.ம.க., அன்புமணி திட்டவட்டம்
எனக்கு கட்சி தான் முக்கியம் பா.ம.க., அன்புமணி திட்டவட்டம்
ADDED : ஏப் 03, 2024 07:25 AM

கடலுார் : அ.தி.மு.க.,விற்கு உயிர் கொடுத்ததே பா.ம.க.,தான் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி பேசினார்.
கடலுாரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து நேற்று அக்கட்சி தலைவர் அன்புமணி பேசியதாவது:
தங்கர்பச்சானை பொது வேட்பாளராாக பார்க்க வேண்டும். அவரை பெற்றி பெற செய்தால் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பார். மற்றவர்களை தேர்வு செய்தால் கடலுார் வீணாகி விடும்.
கடலுார் சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வேதிப்பொருட்களால் காற்று, நீர், மண் மாசடைவதை தி.மு.க., - அ.தி.மு.க., கண்டுகொள்ளவில்லை. சிப்காட்டில் வீசிய துர்நாற்ற பிரச்னை பா.ம.க., போராட்டத்தால் தீர்வு காணப்பட்டது.
தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். இத்தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத் எனது மைத்துனர். ஆரணி தொகுதி எம்.பி.,யான அவர் அங்கு மக்கள் திட்டங்களை செய்யாததால் அங்கு போட்டியிடாமல், இங்கு வந்துள்ளார். அவர் பா.ம.க.,வை விமர்சிக்கிறார். எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். எனக்கு கட்சியும், கூட்டணி கட்சிகளுமே முக்கியம்.
பா.ம.க., துரோகம் செய்துவிட்டதாக அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க., விற்கு உயிர் கொடுத்ததே பா.ம.க.,தான். தி.மு.க.,-அ.தி.மு.க., வை மாறி மாறி தோளில் சுமந்து இட ஒதுக்கீடு, மதுவிலக்கு, தடுப்பணை போன்ற பிரச்னைகளுக்காக கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். இது போதும். மாற்றம் தேவை. எதிர்க்கட்சி வேட்பாளர்களை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

