/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை ராணுவ படையினர் காரைக்காலில் கொடி அணிவகுப்பு
/
துணை ராணுவ படையினர் காரைக்காலில் கொடி அணிவகுப்பு
ADDED : மார் 27, 2024 11:38 PM

காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலையொட்டி மத்திய துணை ராணுவ படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
காரைக்கால் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலையொட்டி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய எல்லைப் பாதுகாப்பு படையச் சேர்ந்த 3கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள் வரவுள்ளனர்.
முதல்கட்டமாக 100 துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சீனியர் எஸ்.பி.,மனீஷ் தலைமையில் எஸ்.பி.,க்கள் சுப்ரமணியன், பாலச்சந்தர் முன்னிலையில் துணை ராணுவப்படை வீரர்கள் நகர் பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதுப்போல் திருநள்ளாறு பகுதியில் எஸ்.பி.,பாலச்சந்தர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
.இதில் இஸ்பெக்டர்கள் புருேஷத்தமன்,செந்தில்குமார்,பால் உள்ளிட்ட மாவட்ட போலீசார் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

