/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முடங்கிய கன்னியக்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம்
/
முடங்கிய கன்னியக்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம்
முடங்கிய கன்னியக்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம்
முடங்கிய கன்னியக்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம்
ADDED : மே 27, 2024 05:24 AM
பாகூர்: பாகூர் பகுதியில் நெல் அருவடை துவங்கி உள்ள நிலையில், முடங்கி கிடக்கும் கன்னியக்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவிலில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் உள்ளது. பாகூர், சேலியமேடு, கிருமாம்பாக்கம், குருவிநத்தம் மற்றும் அதனையொட்டி உள்ள தமிழக பகுதி விவசாயிகள் நெல், மணிலா, காராமணி பயிர், உளுந்து போன்றவை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்வார்கள்.
தற்போது, பாகூர் பகுதியில் நவரை பருவ நெல் அருவடை நடைபெற்று வரும் நிலையில், கன்னியக்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் தற்போது செயல்பாடின்றி முடங்கி போய் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
வியாபாரிகள் ஒழுங்கு முறை கூடத்தில் நெல்லை கொள்முதல் செய்யாமல், விவசாய நிலத்திற்கு சென்று குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகள் கூறுகின்றனர். இதனால், அருவடை செய்யப்பட்ட நெல்லை தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது.
இது குறித்து பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் கூறுகையில்''பாகூர் பகுதிகளில் நவரை பருவ நெல் அறுவடை துவங்கி உள்ள நிலையில், கன்னியக்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் மூலமாக ஒரு மூட்டை நெல் கூட கொள்முதல் செய்யப்படவில்லை.
வியாபாரிகள் நேரடியாக வயலில் கொள்முதல் செய்வதால், விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதில்லை.
கொள்முதலே நடைபெறாமல் உள்ள கன்னியக்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒரு கண்காணிப்பாளர் உட்பட மொத்தம் 7 பேர் வேலை செய்கின்றனர். இந்திய உணவுக் கழகம் மூலமாக மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும். அதற்காக விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு 2 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
ஆனால், கன்னியக்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அதற்குண்டான எந்த ஏற்பாட்டினையும் இதுவரை வேளாண்துறை செய்யவில்லை. கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகம் தற்போது விவசாயிகளுக்கு அரசு அறிவித்த எந்த திட்டத்தினையும் செயல்படுத்தாமல் மெத்தனமாக உள்ளது.
எனவே, கவர்னர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்''.

