ADDED : ஏப் 01, 2024 06:44 AM

புதுச்சேரி, : புதுச்சேரி பல்கலைக்கழகம் சுப்பரமணிய பாரதியார் தமிழ்மொழி மற்றும் இலக்கியப்புலம் சார்பில் ஆனந்தரங்கபிள்ளை அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
பல்கலைக்கழக தமிழ்துறை கருத்தரங்க கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, துறைத் தலைவர் கருணாநிதி வரவேற்றார், ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் நோக்க வுரையாற்றினார். புல முதன் மையர் சுடலை முத்து வாழ்த்துரை வழங்கினார்.
ஆனந்தரங்கபிள்ளை குடும்பத்தைச் சேர்ந்த ஆஷா ஆனந்தரங்க ரவிச்சந்தர் வாழ்த்துரை வழங்கினார்.
பல்கலைக்கழக துணை வேந்தர் தரணிக்கரசு தலைமை தாங்கி, பேராசிரியர் செல்வம் இயற்றிய ஆனந்தரங்கபிள்ளைப் பற்றிய ஆங்கில நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
வரலாற்று ஆய்வாளர் ஜெயசீலஸ்டீபன் ஆனந்தரங்கபிள்ளையின் நாட்குறிப்பு குறித்து சிறப்புரையாற்றினார். போராசிரியர் ஸ்ரீவித்யா நன்றி கூறினார்.

