/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய ஓட்டுச்சாவடி விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு
/
புதிய ஓட்டுச்சாவடி விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு
புதிய ஓட்டுச்சாவடி விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு
புதிய ஓட்டுச்சாவடி விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு
ADDED : ஏப் 07, 2024 04:19 AM
புதுச்சேரி : புதியதாக உருவாக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளின் விபரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாநிலத்தில் அனைத்த அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் ஆலோசனைப்படி, புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகள், வாக்காளர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் புதிய ஓட்டுச்சாவடிகள் உருவாக்கியும், பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஓட்டுச்சாவடிகள் குறித்த தகவல்கள் வாக்காளர்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆறு ஓட்டுச்சாவடிகள் பற்றிய விவரங்களையும், மாவட்ட தேர்தல் அலுவலகம், வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவி அதிகாரியின் அலுவலகம் ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் www.ceopuducherry.py.gov.in மற்றும் https://puducherry--dt.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

