/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சங்காலயா மோட்டார்ஸில் மகேந்திரா நிறுவன புதிய கார் அறிமுகம்
/
புதுச்சேரி சங்காலயா மோட்டார்ஸில் மகேந்திரா நிறுவன புதிய கார் அறிமுகம்
புதுச்சேரி சங்காலயா மோட்டார்ஸில் மகேந்திரா நிறுவன புதிய கார் அறிமுகம்
புதுச்சேரி சங்காலயா மோட்டார்ஸில் மகேந்திரா நிறுவன புதிய கார் அறிமுகம்
ADDED : மே 15, 2024 01:28 AM

கடலுார் : புதுச்சேரி சங்காலயா மோட்டார்ஸில், மகேந்திரா நிறுவன புதிய கார் அறிமுக விழா நடந்தது.
சங்காலயா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் துரைராஜ் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றினார். முதன்மை செயல் அதிகாரி கார்த்திக் வரவேற்றார். மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவன விற்பனை மேலாளர் விக்னேஷ் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி வடக்கு எஸ்.பி., வீரவல்லபன், எக்ஸ்.யூ.வி. 3.எக்ஸ்.ஓ என்ற புதிய காரை அறிமுகப்படுத்தினார். வாடிக்கையாளர் விஜயலட்சுமி முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், விஷ்ணு பிரதாபன் வாழ்த்திப் பேசினர்.
விழாவில், மனித வள மேம்பாட்டு பிரிவு மேலாளர் ஜெயக்குமார், வசந்தராஜ், விற்பனை மேலாளர்கள் செல்வ ஜெகத் குரு, தியாகு, சர்வீஸ் மேலாளர்கள் சங்கர நாராயணன், சக்திவேல், உதிரி பாகங்கள் விற்பனை பிரிவு மேலாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.
பொது மேலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
புதிய கார் குறித்து நிர்வாக இயக்குனர் துரைராஜ் கூறுகையில், 'மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனத்தின் புதிய வாகனமான எக்ஸ்.வி.வி.3.எக்ஸ் கார் ஆரம்ப விலை 7.49 லட்சம் ரூபாய் ஆகும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் மிக குறைந்த எரிபொருள் செலவில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 20 முதல், 21 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ளலாம். உலக தரத்திற்கு இணையான முன்னணி வாகனங்களில் உள்ள அனைத்து வகை தொழில்நுட்ப வசதிகள் உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் மாடல்களில் கார் கிடைக்கிறது. 8 வண்ணங்களில் கார் உள்ளது ' என்றார்.

