தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரிக்கு புதிய சட்டசபை ரூ.576 கோடி பணிக்கு ஒப்புதல்

புதுச்சேரிக்கு புதிய சட்டசபை ரூ.576 கோடி பணிக்கு ஒப்புதல்

புதுச்சேரிக்கு புதிய சட்டசபை ரூ.576 கோடி பணிக்கு ஒப்புதல்


ADDED : செப் 01, 2024 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2024 01:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் தலைமை செயலகத்துடன் கூடிய, புதிய சட்டசபை கட்ட கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து சபாநாயகர் செல்வம் கூறியதாவது:

புதிய சட்டசபை வளாகம், தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில், 15 ஏக்கர் பரப்பளவில், 576 கோடி ரூபாயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த கோப்பு மத்திய உள்துறை அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்ததும், டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்படும்.

நீண்ட காலமாக கிடப்பில் இருந்த இந்த கோப்புக்கு, கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த காலங்களில், கவர்னர், தலைமைச் செயலர், முதல்வர் என்ற மூன்று அதிகார மையங்கள் தனித்தனியாக இருந்தன.

தற்போது, அனைத்து நிர்வாக மையங்களும் ஒன்றிணைந்து, ஒரே அரசாக செயல்படுகிறது. புதிய கவர்னர் இணக்கமாக இருப்பதால், நல்ல நிர்வாகம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us