/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அவசியமான நிகழ்ச்சி பெற்றோர் பாராட்டு
/
அவசியமான நிகழ்ச்சி பெற்றோர் பாராட்டு
ADDED : ஏப் 01, 2024 05:02 AM

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கண்களை திறந்தது'' என பெற்றோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மருத்துவம், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் என பல்வேறு துறை சார்ந்த படிப்புகள் அனைத்தையும் கல்வியாளர்கள் சிறப்பாக எடுத்துரைத்தனர். வழிகாட்டி கண்காட்சி, கருத்தரங்க ஏற்பாடுகள் அனைத்துமே சூப்பர்.
தமிழகம், புதுச்சேரியில் பிரபலமான முன்னணி கல்வி நிறுவனங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்ததால் சிரமம் இல்லாமல் அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் கேட்டு அறிய முடிந்தது. இந்நிகழ்ச்சி, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோரின் கண்களைத் திறப்பதாக அமைந்தது.
வெற்றிவேலன், புதுச்சேரி.
எதிர்காலத்தில் என்ன மாதிரியான படிப்புகள் படித்தால் வேலை கிடைக்கும் என்பதை பற்றிய விவரங்களை வழிகாட்டி நிகழ்ச்சியில் தெரிந்து கொண்டோம். நம் பிள்ளைகளை எப்படி புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு எப்படி பக்கபலமாக இருக்க வேண்டும் என கல்வியாளர்கள் எடுத்துரைத்தனர்.
இது போன்ற வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் அவசியமான ஒன்று.இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தினமலர் நாளிதழுக்கு பாராட்டுகள்.
ராஜரத்தினம், புதுச்சேரி.

