ADDED : ஏப் 25, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கோர்க்காடு அய்யனாரப்பன் கோவிலில் அசைவு உணவு படையல் நிகழ்ச்சி நடந்தது.
கோர்க்காடு கிராமத்தில் உள்ள பூரணி பொற்கிலை உடனுறை அய்யனாரப்பன் கோவிலில், சித்திரை முதல் திங்கள் அய்யனரப்பானுக்கு திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடந்தது. எட்டாம் நாளான நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் சமைத்து வந்த அசைவ உணவை வைத்து ஆயிரம் முட்டைகளுடன் கூடிய பிரம்மாண்ட படையல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் மீன், கருவாடு, மட்டன், முட்டை, சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை கொட்டி கலந்து பூசாரி அன்னபிரசாதமாக அனைத்து பக்தர்களுக்கும் வழங்கினர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

