/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மோடியும், பழனிசாமியும் மக்களை ஏமாற்றுகிறார்கள் காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு

ADDED : ஏப் 16, 2024 07:15 AM
வானுார், : 'மோடியும், பழனிசாமியும் மக்களை ஏமாற்றுவதற்கு அரசியல் செய்கிறார்கள்' என தமிழக காங்., மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார்.
விழுப்புரம் லோக்சபா தொகுதி வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கோட்டக்குப்பத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தை பேசியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின், மகளிருக்கு உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்குகிறார். அதுபோல, மத்தியில் ஆட்சி அமைந்தவுடன் காங்., தலைவர் ராகுல், மாதம் 8,500 ரூபாய் வீதம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப் போகிறார். தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட ஊதியம் ரூ.400 ஆக உயர்த்துவதாக ராகுல் அறிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி., ஏழை விவசாயிகளுக்கு ஒருபோதும் அமல்படுத்த மாட்டோம் கூறியுள்ளார்.
பெண்களுக்கு, இளைஞர்களுக்கு, தொழிலாளர்களுக்கு, வேளாண் குடிமக்கள் என அனைவருக்கும் வாக்குறுதிகள், திட்டங்களை காங்., தலைவர் ராகுல் கொடுத்துள்ளார். அதை கண்டிப்பாக நிறைவேற்றப் போகிறார்.ஏன் பழனிசாமியால், மோடியால் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டுவர முடியவில்லை என்றால் இவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக அரசியல் செய்கிறார்கள்.
அம்பேத்கர் எழுதிக்கொடுத்த அரசயலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.
தேசத்தில் ஒரு அதிபராக கொண்டு வர வேண்டும். ஒரு கொடியாக, ஒரு மதமாகக் கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை பேசினார்.