/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டுறவு சர்க்கரை ஆலையை இந்தாண்டே திறக்க நடவடிக்கை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

ADDED : ஆக 15, 2024 05:12 AM

திருக்கனுார்: லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இந்தாண்டே திறப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
மண்ணாடிப்பட்டு தொகுதி பி.எஸ்.பாளையம், கூனிச்சம்பட்டு, லிங்காரெட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.
விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று 200 மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கினார். பின்னர், சமூக நலத்துறை மூலம் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகளில் மூவர்ண கொடியேற்ற மாணவர்களுக்கு கொடியினை வழங்கினார்.
இதில், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, ஆணையர் எழில்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., பிரமுகர் முத்தழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
லிங்காரெட்டிப்பாளையம் பள்ளியில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், 'அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகம், லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு புத்தகப் பை மற்றும் ஷூ (காலணி) வழங்கப்படும். பாண்கோஸ் மேல்நிலைப் பள்ளி, அரசு பள்ளியாக வெகு விரைவில் மாற்றப்படும். கூட்டுறவு சர்க்கரை ஆலையை இந்தாண்டே இயக்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தனி அதிகாரி நியமிக்கப்பட்டு, தனியார் பங்களிப்புடன் இயக்க ஆவணம் செய்யப்பட்டு வருகிறது' என்றார்.