/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் பைபாசில் எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு
/
வில்லியனுார் பைபாசில் எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு
ADDED : மார் 01, 2025 04:15 AM

வில்லியனுார் : வில்லியனுார் பைபாசில் புதிதாக அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., சிலை திறக்கப்பட்டது.
வில்லியனுார் மூலக்கடையில் எம்.ஜி.ஆர்., சிலையை, கடந்த 1996ல் அப்போதைய அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
வில்லியனுார் பைபாஸ் அமைக்கப்பட்டதால், போக்குவரத்து இடையூறாக இருந்த எம்.ஜி.ஆர்., சிலை அகற்றப்பட்டது. தற்போது பைபாசில் விநாயகர் கோவில் அருகில் புதிய எம்.ஜி.ஆர்., சிலை அமைக்கப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயாரானது.
இதற்கிடையே நேற்று காலை அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு நிர்வாகி அப்பாவு தரப்பில், கலெக்டர், மேற்கு பகுதி போலீஸ் எஸ்.பி., மற்றும் வில்லியனுார் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
அதில், சிலை திறப்பு கல்வெட்டில், அ.தி.மு.க.,வின் ஒரு தரப்பு நிர்வாகிகள் பெயர் மட்டும் உள்ளது. பழைய கல்வெட்டில் இருந்த அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு, அ.ம.மு.க., நிர்வாகிகள் பெயரும் இடம்பெற வேண்டும் என, தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழா நடந்தது. அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்தார். அ.தி.மு.க., நிர்வாகிகள் திருநாவுக்கரசு, சுத்துகேணி பாஸ்கர், ரவிபாண்டுரங்கன், ராஜாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

