தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என்.சி.சி., மாணவர்களுக்கு பதக்கம்

என்.சி.சி., மாணவர்களுக்கு பதக்கம்

என்.சி.சி., மாணவர்களுக்கு பதக்கம்


ADDED : ஆக 16, 2024 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2024 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சுதந்திர தின விழாவில் சிறந்த என்.சி.சி., மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி விருது வழங்கி பாராட்டினார்.

என்.சி.சி.,யில் சிறப்பாக செயல்பட்ட முதுநிலை மற்றும் இளநிலை பிரிவு மாணவர்களுக்கு முதல்வரின் தங்க பதக்கம், கல்வி அமைச்சரின் வெள்ளி பதக்கம், கல்வி செயலரின் வெண்கல பதக்கம் வழங்கப்படுகின்றது.

என்.சி.சி., மாணவர்களுக்கான முதுநிலை பிரிவில் முதல்வரின் தங்கப்பதக்கம் முதுநிலை தரைப்படை பிரிவு மாணவர் திவாகருக்கும், கல்வி அமைச்சரின் வெள்ளி பதக்கம் முதுநிலை விமானப்படை பிரிவு மாணவி சக்திப்பிரியாவுக்கும், கல்வி செயலரின் வெண்கலப்பதக்கம் முதுநிலை விமானப்படை பிரிவு மாணவி சிவானி சங்கருக்கும் முதல்வர் ரங்கசாமி வழங்கி பாராட்டினார்.

என்.சி.சி., இளநிலை பிரிவில் முதல்வரின் தங்கப்பதக்கம் இளநிலை தரைப்படை பிரிவு மாணவி சாராவதிக்கும், கல்வி அமைச்சரின் வெள்ளி பதக்கம் இளநிலை விமானப்படை பிரிவு மாணவன் தருண்குமாருக்கும், கல்வி செயலரின் வெண்கலப்பதக்கம் இளநிலை விமானப்படை பிரிவு மாணவி கயலுக்கும் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us