நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
பாகூர் அடுத்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் சிவபெருமாள் மகள் சினேகா,22; கோரிமேட்டில் உள்ள மதர் தெரசா நர்சிங் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் 4ம் ஆண்டு படித்து வரும், இவர், தற்போது ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பயிற்சிக்கு சென்று வருகிறார். கடந்த 7ம் தேதி காலை வழக்கம் போல் பயிற்சிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிவபெருமாள் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

