ADDED : மே 24, 2024 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை மார்க்கெட்டில் 3 நம்பர் லாட்டரி விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை காந்தி வீதி மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. முத்தியால்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, தப்பித்து ஓட முயன்ற நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில், கோட்டக்குப்பம், பழைய மதராஸ் வீதியைச் சேர்ந்தவர் முகமது ரபிக், 53; என்பதும், தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. முகமது ரபிக்கிடம் இருந்து 3 நம்பர் லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய காகிதம், 2 மொபைல்போன், ரூ. 7500 பணத்தை பறிமுதல் செய்தனர். முகமது ரபிக்கை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

