/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிங்கப்பூராக மாற்றுவோம்! புதுச்சேரியில் பழனிசாமி வாக்குறுதி
/
சிங்கப்பூராக மாற்றுவோம்! புதுச்சேரியில் பழனிசாமி வாக்குறுதி
சிங்கப்பூராக மாற்றுவோம்! புதுச்சேரியில் பழனிசாமி வாக்குறுதி
சிங்கப்பூராக மாற்றுவோம்! புதுச்சேரியில் பழனிசாமி வாக்குறுதி
UPDATED : மார் 31, 2024 03:46 PM
ADDED : மார் 31, 2024 06:37 AM

புதுச்சேரி: ''அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றால் புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றி அமைப்போம்,'' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி உறுதி அளித்தார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து அவர் பேசியதாவது:
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வெகு நாட்களாக போட்டியிடவில்லை; தற்போது போட்டியிடுகிறது.
புதுச்சேரிக்கு மாநில அந்துஸ்து இல்லாததால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்பட முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை உள்ளது. இதை நீக்கி தனி மாநில அந்தஸ்து பெற வேண்டும்.
தமிழ்வேந்தனுடன் தமிழகத்தில் வெற்றி பெறும், 39 பேரும் சேர்ந்து, மாநில அந்தஸ்துக்காக அழுத்தம் கொடுத்து பெறுவர். மாநில அந்தஸ்து கிடைத்தால் தான் புதுச்சேரிக்கு உரிய நிதிப்பகிர்வு கிடைக்கும்.
கடந்த 43 ஆண்டுகளாக புதுச்சேரியை காங்., - தி.மு.க., - என்.ஆர். காங்., கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்கின்றன.
அவர்களால் மாநில உரிமைகளை மீட்க முடியவில்லை. அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தான் உரிமையை பெற முடியும்.
அதற்கான தில், திராணி, தெம்பு அ.தி.மு.க.,விடம் தான் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவர்னர் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
தேர்தலின் போது அளிக்கும் வாக்குறுதிகள், ஆட்சிக்கு வந்தால் கவர்னர் மனது வைத்தால் தான் நிறைவேற்ற முடியும் நிலை உள்ளது. முதல்வரால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.
அ.தி.மு.க., வெற்றி பெற்றால் புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றி அமைப்போம். சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையில், புதுச்சேரியை அழகு நகராக உருவாக்க முடியும்.
புதுச்சேரி வளர்ச்சி பெற அடுத்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும். அதற்கு இந்த தேர்தல் தான் பிள்ளையார் சுழி.
இவ்வாறு பேசினார்.

