/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளைஞர்களை திரட்டி போராட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை
/
இளைஞர்களை திரட்டி போராட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை
இளைஞர்களை திரட்டி போராட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை
இளைஞர்களை திரட்டி போராட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை
ADDED : ஆக 27, 2024 04:10 AM
புதுச்சேரி : உதவியாளர் பணிக்கான தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே என்பது தமிழ்வழி பயின்ற மாணவர்களை புறக்கணிக்கும் செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி ஆட்சி மொழியாக தமிழ், தெலுக்கு, மலையாளம், பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. புதுச்சேரி - காரைக்கால் பகுதிகளில் தமிழ், ஏனாமில் தெலுங்கு, மாகியில் மலையாளம் ஆகியவை அலுவல் மொழியாக உள்ளது.
அரசு வேலை வாய்ப்புகளில் இதுவரை நடந்த தகுதி தேர்வுகளும் பிராந்திய மொழியோடு ஆங்கிலமும் இணைத்து நடத்தப்பட்டது. ஆனால், தற்போது உதவியாளர் தேர்வில் இந்த நடைமுறை மாற்றப்பட்டு ஆங்கிலம் மட்டுமே தேர்வுக்கான மொழியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆட்சிமொழி சட்டத்தையே மீறிய செயலாகும். இது கண்டனத்திற்குறியது.
புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்து வந்தவர்கள் தான் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர்.
இப்படி தமிழ் மொழியில் கல்வி கற்றவர்களை வெளியேற்றும் முயற்சிதான், ஆங்கில வழி தேர்வு முறை என்பது. தமிழ்வழி இளைஞர்களை பழிவாங்கும், அரசின் ஆட்சிமொழி சட்டத்திற்கு எதிரான செயல்பாட்டை உடனே சரிசெய்ய வேண்டும். தேர்வுக்கான அறிவிப்பின் 10.4-வது பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டும் அமையும் என்ற சரத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.
இல்லையெனில் இளைஞர்களையும், பொது மக்களையும் திரட்டி அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை தி.மு.க., முன்னெடுக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

