/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மர்டர் மணிகண்டன் சிறையில் இருந்து பணம் கேட்க சொன்னது உறுதியானது
/
மர்டர் மணிகண்டன் சிறையில் இருந்து பணம் கேட்க சொன்னது உறுதியானது
மர்டர் மணிகண்டன் சிறையில் இருந்து பணம் கேட்க சொன்னது உறுதியானது
மர்டர் மணிகண்டன் சிறையில் இருந்து பணம் கேட்க சொன்னது உறுதியானது
ADDED : ஆக 28, 2024 06:12 AM
புதுச்சேரி: உழவர்கரையில் கொலை செய்யப்பட்ட ரவுடியின் உறவினரிடம் மர்டர் மணிகண்டன் பணம் கேட்க சொன்னது போலீஸ் விசாரணையில் உறுதியானது.
புதுச்சேரி, உழவர்கரையைச் சேர்ந்தவர் விமல். கொலை செய்யப்பட்ட ரவுடி தெஸ்தான் உறவினர். கடந்த மாதம் 18ம் தேதி விமல் வீட்டின் முன்பு சந்தேகத்திடமாக நின்றிருந்த 6 பேர், போலீசாரை கண்டதும் தப்பியோடினர்.
விசாரணையில், நோணாங்குப்பம், பள்ளிகூட வீதி ரஞ்சித்குமார், 33; பூமியான்பேட்டை பவாணர் நகர், பிரகாஷ்குமார், 28; வாணரப்பேட்டை, பிரான்சுவா தோப்பு, ரவுடி ஜெரால்டு, 44; மற்றும் சார்ப் விக்கி, மோகன்ராஜ், பைரவா ஆகியோர், சிறையில் உள்ள மர்டர் மணிகண்டன் கூறியதன்பேரில் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.
இதில், ரஞ்சித்குமார், பிரகாஷ்குமார், ஜெரால்டு ஆகியோரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும், ஏற்கனவே வேறு வழக்கில் சிறையில் உள்ள மர்டர் மணிகண்டனை போலீசார், நேற்று முன்தினம் கோர்ட் அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், மர்டர் மணிகண்டன் சிறையில் இருந்து பணம் கேட்க சொன்னது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து போலீசார் நேற்று மர்டர் மணிகண்டனை சிறைக்கு அழைத்துச் சென்று, மொபைல் போனை எங்கு மறைத்து வைத்திருந்தார். எங்கிருந்து போன் செய்தார் என்பது குறித்து விசாரித்தனர். பின்னர், நேற்று மாலை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

