/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரியில் இலகு ரக ராக்கெட் மாதிரி அறிமுக நிகழ்ச்சி

ADDED : மே 22, 2024 07:00 AM

வானுார் : விழுப்புரம் வி.ஆர்.எஸ்., தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், தனியார் நிறுவனமான ஏரோகீரின் டெக்னாலஜிஸ் மூலம் இலகு ரக ராக்கெட் மற்றும் ரோபோக்கள் ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
அதன் தொடர்ச்சியாக வி.ஆர்.எஸ்., கல்லுாரி வளாகத்தில் இலகு ரக ராக்கெட் மாதிரி அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஏரோகிரீன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர்கள் ராஜமனோகரன், கோவிந்தராஜ் மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் தலைவர் சரவணன், முதல்வர் அன்பழகன் ஆகியோர் இலகு ரக ராக்கெட் மாதிரியை அறிமுகம் செய்து வைத்தனர்.
நிகழ்ச்சியில், வேலை வாய்ப்பு அதிகாரி ஜோசப், இ.சி.இ., துறைத்தலைவர் சாதிக்பாஷா மெக்கானிக்கல் துறை தலைவர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இது குறித்து ஏரோகிரீன் டெக்னாலஜிஸ் நிர்வாகி கள் கூறுகையில், ஏரோகிரீன் டெக்னாலஜிஸ் நிறுவனம் பேரிடர் கால மீட்பு மற்றும் அவசர உதவிக்கு தேவைப்படும் இலகு ரக ராக்கெட் மற்றும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளது. இதற்கான முன்னோட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 11.45 கோடி மதிப்பீல் இந்த இலகு ரக ராக்கெட் உருவாக்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்றனர்.