/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சின்னம் பொருத்தும் பணி துவக்கம் வேட்பாளர், முகவர்களுக்கு அழைப்பு
/
சின்னம் பொருத்தும் பணி துவக்கம் வேட்பாளர், முகவர்களுக்கு அழைப்பு
சின்னம் பொருத்தும் பணி துவக்கம் வேட்பாளர், முகவர்களுக்கு அழைப்பு
சின்னம் பொருத்தும் பணி துவக்கம் வேட்பாளர், முகவர்களுக்கு அழைப்பு
ADDED : ஏப் 11, 2024 04:02 AM

புதுச்சேரி: வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினக் கணக்குகளை முறையாகப் பராமரித்து தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கு வரும் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கின்றது.
இதற்கு தேவையான ஓட்டுபதிவு இயந்திரங்கள் நான்கு பிராந்தியங்களில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பி, அங்கு பாதுகாப்பு அறைகளில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி இன்று 11ம் தேதி துவங்க உள்ளது.இதனையொட்டி, ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடர்பான வேட்பாளர்கள், அவர்களது முகவர்களுடனான கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பேசியதாவது:
ஓட்டுபதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி இன்று நடக்கிறது. எனவே வேட்பாளர்கள்,முகவர்கள் தவறாமல் இதில் கலந்து கொள்ள வேண்டும்.
சிறார்களைத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்தக்கூடாது. வேட்பாளர்கள் தேர்தல் செலவினக் கணக்குகளை முறையாகப் பராமரித்து ஏற்கனவே குறிப்பிடப்பட்ட தேதிகளில் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொதுப் பார்வையாளர் அசித்தா மிஸ்ரா,உதவி கலெக்டர் யஷ்வந்த் மீனா,மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரி வினயராஜ், வேட்பாளர்கள்,முகவர்கள் பங்கேற்றனர்.

