/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுதந்திர தின பாதுகாப்பு போலீசார் வாகன சோதனை
/
சுதந்திர தின பாதுகாப்பு போலீசார் வாகன சோதனை
ADDED : ஆக 13, 2024 05:09 AM

புதுச்சேரி: சுதந்திர தினத்தையொட்டி போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி முழுதும் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த போலீஸ் தலைமையகம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, மாநில எல்லை யான கோரிமேடு மற்றும் கொக்குபார்க் சிக்னலில் கோரிமேடு போலீஸ் சார்பில் நேற்று இரவு திடீர் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுப்பட்டனர். சந்தேகத்திடமாக ஏதேனும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
இதேபோல் மேட்டுப்பாளையம் சந்திப்பில் இன்ஸ்பெக்டர் முத்துக் குமரன், சப்இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

