/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஈகன் பொறியியல் கல்விக்கூடம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
/
ஈகன் பொறியியல் கல்விக்கூடம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
ஈகன் பொறியியல் கல்விக்கூடம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
ஈகன் பொறியியல் கல்விக்கூடம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
ADDED : செப் 17, 2024 05:44 AM

புதுச்சேரி, : புதுச்சேரி மணவெளி பழைய பூரணாங்குப்பம் சாலையில், கட்டடக்கலைப் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும், ஈகன் பொறியியல் கல்வி கூடத்தை முதல்வர் திறந்துவைத்தார்.
முதல்வர் ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கல்வி கூடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், பாஸ்கர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக ஈகன் பொறியியல் கல்விக்கூடம் நிறுவனர் சீனு திருஞானம் வரவேற்று பேசுகையில்; புதுச்சேரியில் கட்டடக்கலை பொறியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சிக்கூடம் (கோச்சிங் கிளாஸ்) இல்லை. எனவே புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள தமிழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஈகன் கல்வி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை வாய்ந்த பேராசிரியர்கள் கொண்டு மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்தப்படுகிறது. அனைத்து பாடங்களுக்கும் தனித்தனி வினாத்தாள், மாதிரித்தேர்வுகள் நடத்தப்படுகிறது என கூறினார். சீனு திருஞானம் எழுதிய சிவில் இன்ஜினியரிங் அப்ஜெக்டிவ் டைப் வினாக்கள் புத்தம் மற்றும் போட்டி தேர்வுக்கான புத்தகத்தை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டு மாணவர்களுக்கு வழங்கினார்.
ஈகன் பொறியியல் கல்வி கூடத்தின் நிர்வாக தலைவர் சியாமளா நன்றி கூறினார். சீனு தமிழ்மணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

