/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் வகுப்பு துவக்கம்
/
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் வகுப்பு துவக்கம்
ADDED : செப் 18, 2024 04:18 AM
புதுச்சேரி : விழுப்புரம், கெங்கராம்பாளையம், ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி வளாகத்தில், 27வது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா நடந்தது.
முதல்வர் மகேந்திரன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் ராஜா தனது தலைமை தாங்கி பேசினார். செயலாளர் சிவ்ராம் ஆல்வா, மாணவர்களை பாராட்டி, ஆழ்நிலை மனோசக்தியை அறிந்து, வாய்ப்பை சரியான நேரத்தில் பயன்படுத்தி வாழ்க்கை பயணத்தை ரசிக்க வேண்டும் என விளக்கினார்.
விருட்சா கவுன்சிலிங் சர்வீசஸ் துணைத்தலைவர் நாராயணன், அர்த்தமுள்ள இலக்கை நிர்ணயித்தல், தொடர்ச்சியான கற்றல் போன்ற முக்கிய வெற்றிக்காரணிகளை விளக்கினார்.
அகாடமிக் டீன் கனிமொழி, பொறியியலின் நோக்கம் மற்றும் முக்கிய மதிப்புகளை விளக்கினார். டாக்டர் சந்தான லட்சுமி, பொருளாளர் விமல், அறங்காவலர்கள் முகமது இலியாஸ், தமீம் அன்சாரி, சிந்து உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் கல்பனா மற்றும் மனிதநேய துறை டாக்டர் மார்கண்டன் ஏற்பாடு செய்திருந்தனர்.

