/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் 'கேத்லேப்' இதய சிகிச்சை பிரிவு துவக்கம்
/
வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் 'கேத்லேப்' இதய சிகிச்சை பிரிவு துவக்கம்
வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் 'கேத்லேப்' இதய சிகிச்சை பிரிவு துவக்கம்
வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் 'கேத்லேப்' இதய சிகிச்சை பிரிவு துவக்கம்
ADDED : ஏப் 23, 2024 04:14 AM

வில்லியனுார் : அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரூ. 5 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட கேத்லேப் இதய சிகிச்சை மையம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு துணை மருத்துவக் கண்காணிப்பாளர் சுரேஷ் வரவேற்றார். வெங்கடேஸ்வரா கல்வி குழும சேர்மன்ராமச்சந்திரன் தலைமை தாங்கி, 'கேத்லேப் பிலிப் அஸியூரன் 5சி 12' என்ற அதிநவீன இயந்திரத்தை இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி வித்யா, மருத்துவக்கல்லுாரி இயக்குனர் ரத்தினசாமி,பொதுமேலாளர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், இதய நோய்சிகிச்சை நிபுணர் பாஸ்கரன் சீனிவாசன் பேசியதாவது:
புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இம்மருத்துவமனையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது இதய நோய் மற்றும் மனித உடலில் ஏற்படும் ரத்த நாளங்கள், குழந்தை பராமரிப்பு கார்டியாக் மற்றும் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி, குழந்தை மருத்துவ ஆஞ்சியோகிராம், பெருமூளை ஆஞ்சியோ பிளாஸ்டி,கல்லீரல்,சிறுநீரக சிகிச்சைகள், கதிரியக்க செயல்முறைகள் மற்றும் நியூரோவாஸ்குலர் சிகிச்சை முறைகள்,மின் இயற்பியல்இதய அடைப்பு கண்டறிவதற்கு 'கேத்லேப்' அதிநவீன கருவிகள் மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதிநவீன சிகிச்சையால் நோயாளிகள்விரைவில் குணமடைய செய்யலாம்.
மேலும், சென்னைக்கு அடுத்து புதுச்சேரியில்முதல்முறையாக வெங்கடேஸ்வரா மருத்துவமனை 'கேத்லேப்' மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மருத்துவமனை துணைப் பொதுமேலாளர் புகழேந்தி நன்றி கூறினார்.

