/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கையெழுத்து பயிற்சி முகாம் ஆர்வமுள்ளோருக்கு அழைப்பு
/
கையெழுத்து பயிற்சி முகாம் ஆர்வமுள்ளோருக்கு அழைப்பு
கையெழுத்து பயிற்சி முகாம் ஆர்வமுள்ளோருக்கு அழைப்பு
கையெழுத்து பயிற்சி முகாம் ஆர்வமுள்ளோருக்கு அழைப்பு
ADDED : ஏப் 09, 2024 04:56 AM
புதுச்சேரி,: லாஸ்பேட்டையில் அழகிய கையெழுத்து பயிற்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
லாஸ்பேட்டை, சாந்தி நகர், வ.உ.சி வீதியில் தினா கையெழுத்து பயிற்சி மையம் உள்ளது. அங்கு, அழகிய கையெழுத்திற்கான பயிற்சி வகுப்பு வரும், 17,ம் தேதி துவங்குகிறது.
படிப்பவர் எளிதில் புரிந்து கொள்ள, தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அழகிய கையெழுத்து அவசியமாகிறது.
தெளிவான அழகிய கையெழுத்து தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.
அந்த பயிற்சி மையத்தில், அழகுடன் முறைப்படி எழுத்துக்களை எழுதும் கலை குறித்து, 42 ஆண்டு காலம், அனுபவம் பெற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பயிற்சி அளிக்கிறார். மொத்தம், 30 நாட்களுக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது.
இந்த பயிற்சியில் சேர விரும்புவோர், மேற்கண்ட முகவரியில் அல்லது, 9789512839 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.