/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குண்டாஸ், தடுப்புக்காவலில் 4 பேர் கைது
/
குண்டாஸ், தடுப்புக்காவலில் 4 பேர் கைது
ADDED : ஜூன் 03, 2024 06:34 AM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், குண்டர் சட்டம் மற்றும் தடுப்புக்காவலில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலுார் கலால் பிரிவு போலீசார், ரயில்வே மேம்பாலம் அருகில் கடந்த 13ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பைக்கில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா கடத்தி வந்த குறிஞ்சிப்பாடி அடுத்த கு.நெல்லிக்குப்பம் ரவி மகன் ராகுல் (எ) வெட்டு ராகுல்,27; காகா (எ) விஜயராஜ் ஆகியோரை கைது செய்தனர். இதில், ராகுல் மீது குறிஞ்சிப்பாடி போலீசில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் ஆகிய 4 வழக்குகள் உள்ளது.
திட்டக்குடி: வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா,47; அரசு பஸ் டிரைவர். இவர், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கினார். புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்தனர்.
விருத்தாசலம்: கருவேப்பிலங்குறிச்சி போலீசார், கடந்த மாதம் 25ம் தேதி, ஆலிச்சிக்குடி அண்ணா சிலை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு அரசால் தடை செய்த லாட்டரி சீட்டுகள் விற்ற ஆலிச்சிக்குடி சேகர், 64; என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கருவேப்பிலங்குறிச்சி,விருத்தாசலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் லாட்டரி சீட்டு விற்றதாக 4 வழக்குகள் உள்ளது.
சேத்தியாத்தோப்பு: காட்டுமன்னார்கோவில், ஆண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன், 48; இவர், மனநலம் பாதித்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தார். இவரை, சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசார் கைது செய்தனர்.
ராகுல், சேகரை தடுப்பு காவலிலும், ராஜா, நடராஜனை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது, எஸ்.பி., ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவுபடி, கடலுார் மத்திய சிறையில் உள்ள நான்கு பேரிடம் அதற்கான உத்தரவு நகலை, போலீசார் வழக்கினர்.

