/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஈஸ்டர் திருநாள் கவர்னர், முதல்வர் வாழ்த்து
/
ஈஸ்டர் திருநாள் கவர்னர், முதல்வர் வாழ்த்து
ADDED : மார் 31, 2024 03:31 AM
புதுச்சேரி, : புதுச்சேரி கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தி;
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்து எழுந்த மூன்றாவது நாளை உயிர்ப்பு பெருவிழாவாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இரக்கமே உருவாக வாழ்ந்த ஏசு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றி மக்கள் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையாக வாழ்ந்திடவும், உலகம் எங்கிலும் அன்பும் அமைதியும் தழைத்து ஓங்கவும் எனது அன்பார்ந்த ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிறிஸ்துவ சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இறைவனின் அருளும் ஆசியும் கிடைக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ரங்கசாமி வாழ்த்து செய்தி
கருணையின் பேரொளியான ஏசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை 'ஈஸ்டர்' பண்டிகையாக கொண்டாடி மகிழும், கிறிஸ்துவ சகோதர - சகோதரிகள், அனைவருக்கும் ஈஸ்டர் தின நல் வாழ்த்துக்கள். ஏசு கிறிஸ்து, நமக்காக செய்த தியாகத்திற்கும், அவர் நம் மீது கொண்ட அளவிட முடியாத கருணைக்கும், அன்பிற்கும் கைமாறாக, நாம் நமது விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை நினைவூட்டுவதாக இந்நாள் உள்ளது. அவருடைய உயிர்த்தெழுதல், அனைவரது வாழ்வும், அமைதியாக, வெற்றிகள் நிறைந்ததாக மற்றும் வளமானதாக அமைய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஏசு கிறிஸ்துவின் தெய்வீக பிரசன்னம், உங்கள் இதயத்தை அமைதியாலும், மகிழ்ச்சியாலும், வாழ்க்கையை ஆசீர்வாதங்களாலும் நிரப்பட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

