/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டல் உரிமையாளரிடம் நுாதன முறையில் ரூ.9,000 மோசடி
/
ஓட்டல் உரிமையாளரிடம் நுாதன முறையில் ரூ.9,000 மோசடி
ஓட்டல் உரிமையாளரிடம் நுாதன முறையில் ரூ.9,000 மோசடி
ஓட்டல் உரிமையாளரிடம் நுாதன முறையில் ரூ.9,000 மோசடி
ADDED : மே 17, 2024 05:37 AM
புதுச்சேரி: ஓட்டல் உரிமையாளரிடம் 9,000 ரூபாய் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளருக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து ரூ. 1,000 மதிப்புள்ள பத்து தோசைக்கான ஆர்டர் போன் அழைப்பு மூலம் வந்துள்ளது. அதற்கு, உரிமையாளர் முதலில் பணம் ரூ.1000 அனுப்புமாறு கூறியுள்ளார். அந்த நபரும் சோதனை செய்வதாக கூறி போன் பே- வங்கி கணக்கு மூலம் ரூ.1 அனுப்பி பணம் வந்துவிட்டதா என கேட்டுள்ளார்.
பின்னர், உரிமையாளர் தனது போன் பே - கணக்கை பார்த்து ரூ.1 வந்ததை உறுதி செய்து அவரிடம் கூறினார். அதன் பிறகு அந்த நபர் உரிமையாளருக்கு தோசைக்கான பணம் ரூ. 10000 அனுப்பியது போல் ஒரு போலியான குறுஞ்செய்தி அனுப்பி, பிறகு அந்த ஓட்டல் உரிமையாளரை போனில் தொடர்பு கொண்டு, ரூ.1000 அனுப்புவதற்கு பதிலாக ரூ. 10000 தவறுதலாக அனுப்பிவிட்டேன்.
ஆகையால், மீதி பணத்தை திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார். அதற்கு ஓட்டல் உரிமையாளர் குறுஞ்செய்தியை மட்டும் நம்பி, அந்த மோசடி நபருக்கு மீதி தொகை ரூ. 9000 அனுப்பிவிட்டு சிறிது நேரம் கழித்து, தனது போன் பே வங்கி கணக்கை சோதனை செய்தபோது, அவருக்கு பணம் ஏதும் வரவில்லை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஒட்டல் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

